Advertisement

டாஸ்மாக்கில் பீர் விற்பனை திடீர் சரிவு.. காரணம் என்ன?

By: Monisha Sun, 10 July 2022 7:53:59 PM

டாஸ்மாக்கில் பீர் விற்பனை திடீர் சரிவு.. காரணம் என்ன?

கோடை காலம் முடிந்து மழைக் காலம் தொடங்கி உள்ளதால் மதுகடைகளில் பீர் விற்பனை சரிந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் மதுபழக்கம் இன்று பரவலாகவும், சாதாரணமானதாகவும் ஆகிவிட்டது.

பெருகி வரும் மதுபிரியர்களின் தாகத்தை தணிக்கும் விதத்தில் எவ்வளவு எவ்வளவு புதுவகை மதுபானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தாலும், குடிமகன்கள் பெருமாபாலாோரின முதல் சாய்ஸ் பீராக தான் உள்ளது.

beer,price,reduce,reason ,மதுகடை,பீர், விற்பனை, சரிவு,

டாஸ்மாக் மதுபான கடைகளில் ஏப்ரல் -20, மே -25, ஜூன் -40 சதவீதம் என்று பீர் விற்பனை வழக்கத்தைவிட எகிறி இருந்தது.

ஆனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பீர் விற்பனை, அதுவும் கூல் பீர் விற்பனை சரிந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|