Advertisement

மீண்டும் உண்மை கதையை இயக்கும் சுதா கொங்கரா... ஹீரோ சூர்யாவாம்!!!

By: Nagaraj Fri, 21 Oct 2022 6:59:39 PM

மீண்டும் உண்மை கதையை இயக்கும் சுதா கொங்கரா... ஹீரோ சூர்யாவாம்!!!

சென்னை: சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுவும் உண்மை சம்பவத்தின் கதை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் 2020ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றது. ஓ.டி.டி. தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பிராந்திய மொழிப் படம் என்ற சாதனையையும் இது எட்டியது.

sooraraippouttu,starring,sudha kongara,surya , சுதா கொங்கரா, சூரரைப்போற்று, சூர்யா நடிப்பில், தேசிய விருதுகள்

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுவும் உண்மை சம்பவத்தின் கதை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார்.

Tags :