Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் கார்த்தியுடன் இணைந்து புதிய படம் இயக்க போகிறார் சுதா கொங்கரா

நடிகர் கார்த்தியுடன் இணைந்து புதிய படம் இயக்க போகிறார் சுதா கொங்கரா

By: Nagaraj Mon, 16 Nov 2020 8:46:45 PM

நடிகர் கார்த்தியுடன் இணைந்து புதிய படம் இயக்க போகிறார் சுதா கொங்கரா

சூரரை போற்று படத்தை அடுத்து நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து படம் செய்ய உள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னத்திடம் 7 வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்த சுதா கொங்கரா, இறுதிச்சுற்று மூலம் கவனம் ஈர்த்தார். அதன்பின், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார்.

இப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரரைப்போற்று படத்திற்கு பின் கார்த்தியை வைத்து ஒரு புதிய படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

actor karthi,sudha kongara,film,ajith,strength ,நடிகர் கார்த்தி, சுதா கொங்கரா, படம் , அஜித், வலிமை

அவரின் இயக்கத்தில் அஜித் நடிக்க விரும்பினார். அவரை அழைத்து பேசினார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், வலிமை படத்தை முடித்து வருதற்குள் கார்த்தியின் படத்தை சுதா கொங்கரா முடித்து விடுவார் எனத் தெரிகிறது.

கார்த்தியை வைத்து இயக்கும் படமும் ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டது எனக்கூறப்படுகிறது.

Tags :
|
|