- வீடு›
- பொழுதுபோக்கு›
- அஜித்திற்கு கொக்கி போடும் சன் பிக்சரஸ் தயாரிப்பு நிறுவனம்
அஜித்திற்கு கொக்கி போடும் சன் பிக்சரஸ் தயாரிப்பு நிறுவனம்
By: Nagaraj Sun, 06 Dec 2020 4:51:24 PM
அஜித்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து கொக்கி போட்டுக்கொண்டிருக்கும் விஷயம் இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெற்றி, தோல்வி என இரண்டையும் சரி சமமாய் கண்டு, தற்போது இமாலய வெற்றியை அடைந்திருப்பவர் தான் தல அஜித். மேலும் எந்த நிலையிலும் தன் நிலை மாறாமல் நடுநிலையாக இருப்பதால்தான் அஜித் இந்த அளவு உயர்ந்து இருக்கிறார்.
தற்போதெல்லாம் தல அஜித்தின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீசை குவித்து வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் பலர், அஜித்தை வைத்து படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தல அஜித்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து கொக்கி போட்டுக்கொண்டிருக்கும் விஷயம் இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது.
அதாவது பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நேற்றுமுன்தினம்
அவர்களுடைய ட்விட்டர் கணக்கில், 'மங்காத்தா' படத்தின் ஒரு புகைப்படத்தை
பதிவிட்டதோடு, 'எப்படி இருக்கு?' என்று கேட்டிருந்தனர்.
இதனைத்
தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அஜித் ரசிகர்களுக்கு
சன் பிக்சர்ஸின் சர்ப்ரைஸ் இது' என்று குறிப்பிட்டிருந்தனர். இதற்கு
காரணம், தல அஜித்தின் அடுத்தப் படமான 'தல 61' படத்தை சன் பிக்சர்ஸ்
தயாரிக்க உள்ளதாகவும், அதற்காக மறைமுக பேச்சுவார்த்தையில் நிறுவனம்
ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தல அஜித்தை வைத்து
மாஸ்டர் பிளான் போடுவதால் தான் சன் பிக்சர்ஸ் தாறுமாறாக அவருக்கு கொக்கி
போட்டு வருகின்றார்கள் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.