- வீடு›
- பொழுதுபோக்கு›
- பெரிய நட்சத்திரங்களை வைத்து அடுத்தடுத்து பிரமாண்ட படங்கள் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்
பெரிய நட்சத்திரங்களை வைத்து அடுத்தடுத்து பிரமாண்ட படங்கள் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்
By: Nagaraj Thu, 07 May 2020 6:37:48 PM
அடுத்தடுத்து என்று பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர் நிறுவனம் என்று கோலிவுட் மக்கள் சொல்கிறார்கள்.
கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வரும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து சமீபத்தில் ஹிட் படங்கள் கொடுத்துள்ளது.
தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து 9 பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கிறதாம்.
அந்த வகையில், அண்ணாத்த, அரண்மனை 3, D44, இப்படங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது. இதுமட்டுமின்றி தளபதி 65, காலபைரவா, காஞ்சனா 4 உள்ளிட்ட படங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
மேலும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படமும், விஜய் சேதுபதியுடன் ஒரு படமும், நடிகர் சூர்யாவுடன் ஒரு படமும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் கூட்டணி போட்டுள்ளதாம். இதனால் பெரிய நட்சத்திரங்களின் பிரமாண்ட படங்களை காண ரசிகர்கள் ரெடியாக உள்ளனர்.