Advertisement

சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷலாக சூரரை போற்று படம் ஒளிபரப்பு?

By: Nagaraj Tue, 24 Nov 2020 5:40:01 PM

சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷலாக சூரரை போற்று படம் ஒளிபரப்பு?

சூரரைப்போற்று படத்தை சன் டிவியில் பொங்கல் அன்று ஒளிபரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இதுவரை அமேசான் பிரைமில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என இப்படம் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

the crew,sun tv,praised the sun,satellite rights ,
படக்குழுவினர், சன் தொலைக்காட்சி, சூரரை போற்று, சேட்டிலைட் உரிமை

எனவே, வருகிற பொங்கலுக்கு இப்படத்தை ஒளிபரப்ப சன் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், பொங்கலுக்கு வேண்டாம். தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுங்கள் என படக்குழு கேட்டுகொண்டுள்ளதாம்.

ஆனால், சன் தொலைக்காட்சி அதற்கு செவி சாய்க்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, பொங்கலுக்கு சன் டிவியில் எப்படியும் சூரரைப்போற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் படக்குழுவினர் தரப்பில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

Tags :
|