Advertisement

சன் டிவியில் ரிலீஸ் ஆகும் சுந்தர் சியின் அடுத்தப்படம்!

By: Monisha Thu, 17 Sept 2020 3:43:50 PM

சன் டிவியில் ரிலீஸ் ஆகும் சுந்தர் சியின் அடுத்தப்படம்!

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் அவரது உதவியாளராக இருந்தவரும் வீராப்பு, தம்பிக்கு எந்த ஊரு மற்றும் தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கிவருமான பத்ரி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது. இந்த படம் கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான 'மாயாபஜார் 2016' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படம் தான்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் இல்லை என்றும், ஓடிடியிலும் ரிலீஸ் இல்லை என்றும், வரும் தீபாவளி அன்று இந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

director sundar c,tamil remake,filming,release,sun tv ,இயக்குனர் சுந்தர் சி,தமிழ் ரீமேக்,படப்பிடிப்பு,ரிலீஸ்,சன் டிவி

ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகிய மலர்கள், ஆடுகிறேன் கண்ணன் ஆகிய தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர் பத்ரி என்பதால் அவருக்கும் சன் டிவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பிரசன்னா, ஷாம், அசோக் செல்வன் ஆகிய மூன்று ஹீரோக்கள் நடிக்கிறார்கள். மேலும், முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். ஸ்ருதி என்பவர் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கின்றார்.

Tags :