Advertisement

சூப்பர் மாடல் மீராமிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு

By: Monisha Thu, 24 Sept 2020 6:07:22 PM

சூப்பர் மாடல் மீராமிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு

பிக்பாஸ் 3வது சீசன் போட்டியாளரும், சூப்பர் மாடலுமான மீராமிதுன், பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும்போதே சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டார். சேரன் மீது அவர் கூறிய பொய்யான புகார் உள்பட அவரது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பார்வையாளர்கள் அவரை போட்டியில் இருந்து வெளியேற்றினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின்னரும் கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்கள் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்வதாகவும் கூறப்பட்டது.

meeramithun,arrested,kerala police,publicity,prosecution ,மீராமிதுன்,கைது,கேரள போலீசார்,பப்ளிசிட்டி,வழக்குப்பதிவு

இந்த நிலையில் கடந்த மே மாதம் மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் ஒட்டுமொத்த மலையாள மக்கள் மனம் புண்படும் வகையில் தெரிவித்த ஒரு கருத்துக்காக கேரள போலீசார் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் மீராமிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :