Advertisement

நடிகர் சரத்பாபு மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்

By: vaithegi Tue, 23 May 2023 11:07:21 AM

நடிகர் சரத்பாபு மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல நடிகரான நடிகர் சரத்பாபு இவர் கடந்த நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதையடுத்து இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.

rajinikanth,actor sarathbabu ,ரஜினிகாந்த் ,நடிகர் சரத்பாபு

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்து உள்ளார். அதில், இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன், இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ரஜினியும் சரத்பாபுவும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல காம்போவில் நடித்து உள்ளனர், அந்த அளவிற்க்கு இவர்களது நடிப்பு நன்றாக இருக்கும்.


Tags :