Advertisement

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு சூப்பர் ஸ்டார் நன்றி

By: vaithegi Tue, 13 Dec 2022 08:58:00 AM

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு சூப்பர் ஸ்டார் நன்றி

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடினார். ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினர். இதனிடையே நடிகர் ரஜினிகாந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் கமலஹாசன், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு. ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

thank you rajinikanth ,ரஜினிகாந்த் ,நன்றி

மேலும் அத்துடன் தனது மற்றொரு பதிவில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிச்சமி, திரு O. பன்னீர் செல்வம், திரு. அண்ணாமலை, திரு.T.K. ரங்கராஜன், திரு. வைக்கோ, திரு.அன்புமணி ராமதாஸ், திரு. G.K. வாசன், திரு. திருநாவுக்கரசு, திரு. A. C. ஷண்முகம், திரு. தொல் திருமாளவன், திரு. சீமான் அவர்களுக்கும், மத்திய, மாநில முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...

இதனை அடுத்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் திரு. கமலஹாசன், திரு. இளையராஜா, திரு. வைரமுத்து, திரு. ஷாருக்கான், திரு. அக் ஷய் குமார், திரு.மோகன்லால், திரு. மம்மூட்டி, திரு. சிவராஜ்குமார், திரு. சரத்குமார், திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. தனுஷ், திரு சிவகார்த்திகேயன் மற்றும் திரையுலகத்தை சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி... என அவர் கூறியுள்ளார்.

Tags :