Advertisement

சூரரை போற்று இந்தி டப்பிங் படம் செப்.1ம் தேதி ரிலீசாம்

By: Nagaraj Wed, 22 Mar 2023 11:41:48 PM

சூரரை போற்று இந்தி டப்பிங் படம் செப்.1ம் தேதி ரிலீசாம்

சென்னை: இந்தி டப்பிங் சூரரை போற்று படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த சூரரைப் போற்று தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது தெரிந்ததே. இந்நிலையில் இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

சூர்யா கேரக்டரில் அக்ஷயகுமாரும், அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதனும் நடிக்கின்றனர்.

akshay,movie,surya,akshay kumar,sudha kongara,praise surya ,Akshay, movie, Surya, அக்‌ஷய் குமார், சுதா கொங்கரா, சூரரைப் போற்று

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில், இப்படத்தின் பாடல் பதிவு தற்போது நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார்.

சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வேறு சில நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. இன்னும் பெயரிடப்படாத படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|