- வீடு›
- பொழுதுபோக்கு›
- சரித்திர கதையம்சம் கொண்ட ஹிந்தி படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா
சரித்திர கதையம்சம் கொண்ட ஹிந்தி படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா
By: Nagaraj Thu, 15 June 2023 11:08:50 PM
சென்னை: நடிகர் சூர்யா சரித்திர கதையம்சம் கொண்ட ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார் என்று கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கிறது.
சென்னை: நடிகர் சூர்யா சரித்திர கதையம்சம் கொண்ட ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் ஓம்பிரகாஷ் மவுரியா இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஏற்கனவே ராம் கோபால் வர்மாவின் இந்தி மற்றும் தெலுங்கில் ரத்த சரித்திரம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சூர்யா சரித்திர கதையம்சம் கொண்ட ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் ஓம்பிரகாஷ் மவுரியா இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தில் 2 பாகங்களாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழில் ஏற்கனவே சிவாஜி கணேசனை வைத்து கர்ணன் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கிய வாடிவாசலும் வெளியாகியுள்ளது. மேலும் சூரரை போற்று படத்தை எடுத்த சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.