Advertisement

கௌதம் மேனன் இயக்கத்தில் வெப்தொடரில் நடிக்கும் நடிகர் சூர்யா!

By: Monisha Tue, 17 Nov 2020 4:32:32 PM

கௌதம் மேனன் இயக்கத்தில் வெப்தொடரில் நடிக்கும் நடிகர் சூர்யா!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். இரண்டுமே மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த நிலையில் மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணையும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணைந்து உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

actor surya,gautham menon,web series,filming,shriram ,நடிகர் சூர்யா,கௌதம் மேனன்,வெப்தொடர்,படப்பிடிப்பு,ஸ்ரீராம்

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடித்து வருவதாகவும் இன்று முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கியதாகவும் சூர்யா படப்பிடிப்பின் போது மிகவும் எனர்ஜியாக இருந்ததாகவும் பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

வெப்தொடராக இருந்தாலும் மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணைந்துள்ளது இரு தரப்பு ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :