Advertisement

பாலாவை திட்டிய வனிதாவை கண்டித்து வீடியோ வெளியிட்ட சூர்யாதேவி

By: Nagaraj Fri, 30 Oct 2020 9:45:29 PM

பாலாவை திட்டிய வனிதாவை கண்டித்து வீடியோ வெளியிட்ட சூர்யாதேவி

பாலாவை திட்டிய வனிதாவை கண்டித்து கடுமையாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் சூர்யா தேவி. இது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவலாக ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது வனிதா, பீட்டர் பால் பிரேக்கப் விஷயம் தான்.
வனிதா, பீட்டர் பால் பிரச்சனை நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் பீட்டர் பாலுக்கும் தனக்கும் இடையில் என்ன பிரச்சனை நடந்தது என்று வனிதாவே வீடியோவை வெளியிட்டார்.

வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தற்போது விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோவில் வனிதா, பாலா மற்றும் ஈரோடு மகேஷ் இணைந்து ஒரு கான்செப்ட் செய்கின்றனர். அதில் பாலா தொடர்ந்து வனிதாவை கலாய்த்து கொண்டிருக்கிறார்.

surya devi,vijay tv,sewer,vanitha,to dance ,சூர்யா தேவி, விஜய் டி.வி., சாக்கடை, வனிதா, ஆட்டம் போடுற

அமைதியாக இருந்த வனிதா கடைசியாக கோபமடைகிறார். பாலாவை எதுக்கும் ஒரு எல்லை இருக்கு, உங்களுக்கு வேற கன்டெடன்ட் கிடைக்கலையா? இந்த வேலையெல்லாம் என்ட வச்சுக்க கூடாது என்று கண்டபடி பேசுகிறார்.

இதற்கு பதிலடி தரும் விதத்தில் சூர்யா, வனிதாவை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வனிதா நீ என்ன பெரிய செலிபிரிட்டினு நெனப்பா?? அந்த பாலாவை அப்படி பேசுற. ஏதோ 25 வருசமா சினிமாவுல நடிச்சிட்டு இருக்க மாறி சீன் போடுற. ஏதோ புதுசா வந்துகிட்டு என்ன ஆட்டம் போடுற.

நீ ஒரு சாக்கடை. அந்த பாலாவை என்னவோ அவ்வோளோ பேச்சு பேசுற. என்ன விஜய் டிவி காரன் உன் புருஷனா.. அவனை அந்த மெரட்டு மெரட்டுற. நீயே ஒரு குப்பை, சாக்கடை டி. விஜய் டிவில உன்ன உட்கார வச்சு இருக்காங்கனு ஓவரா குதிக்காதே என்று ஏகத்திற்கும் திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் சூர்யா தேவி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags :
|