Advertisement

வெப் தொடரில் திருநங்கையாக நடிக்கும் சுஷ்மிதா சென்

By: Nagaraj Fri, 07 Oct 2022 7:39:41 PM

வெப் தொடரில் திருநங்கையாக நடிக்கும் சுஷ்மிதா சென்

மும்பை: சுஷ்மிதா சென் ‘தாலி’ என்ற வெப் தொடரில் திருநங்கையாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் படத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து பாலிவுட் துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அவருக்கு 46 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரபல மாடல் ரோஹ்மன் ஷால் என்பவருடன் காதல் உறவில் இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததால், தத்தெடுத்த இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் படங்களில் நடிப்பதை விட்டு விலகி ஓரிரு வெப் சீரிஸ்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது சுஷ்மிதா சென் ‘தாலி’ என்ற வெப் தொடரில் திருநங்கையாக நடித்து வருகிறார். மும்பையில் வாழும் திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலரான சௌரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது.

transgender,sushmita sen,dignity,web series,ownership ,திருநங்கை, சுஷ்மிதா சென், கண்ணியம், வெப் சீரிஸ், உரிமை

இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சுஷ்மிதா சென், “இந்த அழகான நபரின் கதாபாத்திரம் மற்றும் கதையை உலகிற்கு கொண்டு வரும் வாய்ப்பை நான் பெற்ற பாக்கியமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்.

அனைவருக்கும் வாழ உரிமை உண்டு. கண்ணியத்துடன் வாழ்க.” சுஷ்மிதாவின் ரசிகர்கள் அவரது தாலி தோற்றத்தை விரும்பினாலும், சமூக ஊடக பயனர்களில் ஒரு பகுதியினர் கௌரியின் பாத்திரம் உண்மையானது என்று கருதினர்.

ஏன் திருநங்கையை நடிக்க வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். பலர் தங்கள் அதிருப்தியை தெளிவுபடுத்தியுள்ளனர். இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “திருநங்கைகளுக்கு நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்ட நேரம் இது என்று நினைக்கிறேன் என்றார்.

Tags :