Advertisement

அடுக்கு மொழியில் பேசிய டி.ராஜேந்தரை அப்செட் ஆக்கியவர்

By: Nagaraj Fri, 06 Nov 2020 8:55:18 PM

அடுக்கு மொழியில் பேசிய டி.ராஜேந்தரை அப்செட் ஆக்கியவர்

அடுக்கு மொழியில் பேசுவதை நிறுத்துங்கள் என்று டி.ராஜேந்தரை சட்டென்று அப்செட் ஆக்கி அமர வைத்த சம்பவம் நடந்துள்ளது.

திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தாலும் விபிஎப் விவகாரத்தினால் புதுப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. விபிஎப் விவகாரத்தை அப்புறமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். முதலில் 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கும்போது புதுப்படங்களை ரிலீஸ் செய்ய விடுங்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கேட்டுக் கொண்டிருக்கிறார்.

t.rajender,layered language,upset,theater,custom ,டி.ராஜேந்தர், அடுக்கு மொழி, அப்செட், திரையரங்கு, வழக்கம்

இதற்கிடையில், விபிஎப் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வந்தார்கள். முதல் நாள் ஆலோசனையில் ஏற்பட்ட அதிருப்தியினால் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இரண்டாம் நாள் ஆலோசனையில் பங்கேற்கவில்லை.

இனிமேலும் அவர்கள் ஆலோசனையில் பங்கேற்பதாக தெரியவில்லை. இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டத்தில் டி.ராஜேந்தர் வழக்கம் போலவே அடுக்குமொழியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று எழுந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ரோகிணி பன்னீர்செல்வம், ''அந்த காலத்துல இருந்தே அடுக்கு மொழிதானா. அதெல்லாம் இப்ப வேணாம். டக்குன்னு விசயத்துக்கு வாங்க.''என்று சொல்ல, இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத டி.ராஜேந்தர் அப்செட்டாகி அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்.

Tags :
|