Advertisement

ரிலீசுக்கு முன்பே வியாபாரத்தில் மிரட்டும் ‘தளபதி 68’

By: vaithegi Sun, 29 Oct 2023 08:28:14 AM

ரிலீசுக்கு முன்பே வியாபாரத்தில் மிரட்டும்  ‘தளபதி 68’

விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வெற்றிப்படமாக அமைந்து உள்ளது. இதையடுத்து இந்த படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் 461 கோடி வசூல் செய்திருந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

எனினும் படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரத்தில் பல சாதனைகளை படைத்திருந்தது. அதிலும் குறிப்பாக இதுவரை விஜய் நடிப்பில் வெளியாவதற்கு முன்பே அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் என்ற சாதனையையும் அதிக தொகைக்கு ஆடியோ உரிமை விற்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. அதனை மிஞ்சும் அளவிற்கு தளபதி 68 படத்தின் ஆடியோ உரிமை விற்கப்பட்டது.

thalapathy 68,business,collection,pict ,தளபதி 68,வியாபாரம்,வசூல் ,படம்

இந்நிலையில், லியோ படத்தை விட 20 % அதிகமாகவே தளபதி 68 திரைப்படம் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதனை பார்த்துவிட்டு விஜய் மெய்சிலிர்த்து விட்டாராம்.

ஏற்கனவே, விஜய்க்கு காமெடியான கலகலப்பான படங்கள் என்றால் நன்றாக செட் ஆகும் என்ற காரணத்தால் வெங்கட் பிரபுவுடன் அவர் ஒரு படத்தில் இணைகிறார் என்றால் அப்படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெருமாம் அது மட்டுமின்றி படத்தில் ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலரும் இணைந்து உள்ள காரணத்தால் இந்த படத்தின் காமெடி காட்சிகளுக்கு குறையே இருக்காதாம்.

எனவே, தளபதி 68 திரைப்படம் பெரிய அளவில் பிரமாண்டமாக எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறாராம். லியோ படத்தின் ஆடியோ உரிமையை விட தளபதி 68 திரைப்படத்தின் ஆடியோ உரிமை விற்பனை செய்யப்பட்டு உள்ளதால். அதைப்போன்று படத்தின் டிஜிட்டல் உரிமையையும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய தொகைக்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தனஞ்செயன் கூறியுள்ளார்.


Tags :