Advertisement

இதையெல்லாம் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது ... தமன்னா

By: vaithegi Sat, 04 Mar 2023 10:07:00 AM

இதையெல்லாம் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது   ...   தமன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடிக்கிறார். ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். அரண்மனை 4-ம் பாகம் பேய் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து தமன்னா குறித்து காதல் கிசுகிசுக்கள் பல வருகின்றன. இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல் பரவி கொண்டு வருகின்றன. இது பற்றி தமன்னா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு எதிராக நிறைய வதந்திகள் வருகின்றன.

tamannaah,rumor ,தமன்னா ,வதந்தி


வரவர ஒவ்வொரு விஷயத்திலுமே எதிர்மறைகள் அதிமாகிவிட்டன. இந்த வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் காதலிப்பதாக தகவல் பரப்புகிறார்கள். ஆனால் நான் இதையெல்லாம் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். என்னை தென்னிந்திய ரசிகர்கள் மில்க் பியூட்டி என்கின்றனர். எனது உடல் நிறம் காரணமாக அப்படி அழைக்கிறார்கள். ரசிகர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வேன். அவர்களிடமிருந்து நிறைய அன்பை பெற்று இருக்கிறேன்" என கூறினார்.

Tags :