Advertisement

இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தமன்னா ஒப்பந்தம்!

By: Monisha Sat, 19 Sept 2020 3:28:08 PM

இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தமன்னா ஒப்பந்தம்!

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஜொலித்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் நடித்த ஆக்சன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அதன்பின்னர் அவர் தமிழில் நடிக்க கமிட் ஆகவில்லை.

ஆனால் அதே நேரத்தில் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே தமன்னா நடிப்பில் உருவான 'தட் இஸ் மகாலட்சுமி' என்ற தெலுங்கு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்தி, தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான 'அந்தாகான்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

bollywood,telugu remake,tamanna,contract,shooting ,பாலிவுட்,தெலுங்கு ரீமேக்,தமன்னா,ஒப்பந்தம்,படப்பிடிப்பு

தபு வேடத்தில் தமன்னாவும், ஆயுஷ்மான் வேடத்தில் நிதினும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷ் ஆகியோர்களும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை மெர்லபகா காந்தி இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே மூன்று தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் விரைவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :