Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூப்பர்ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்!

சூப்பர்ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்!

By: Monisha Tue, 25 Aug 2020 10:47:25 AM

சூப்பர்ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்!

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும் ஒரு இந்தி படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமன்னாவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கன்னடத்தில் சூப்பர்ஹிட் ஆன திரைப்படம் 'Love Mocktail’. பிரபல கன்னட நடிகர் கிருஷ்ணா இயக்கத்தில் அவரே தயாரித்து நாயகனாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

superhit,telugu remake,tamanna,kannada,satyadev ,சூப்பர்ஹிட்,தெலுங்கு ரீமேக்,தமன்னா,கன்னடம்,சத்யதேவ்

இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கிருஷ்ணா நடித்த வேடத்தில் சத்யதேவ் நடிக்கவுள்ளார். அதேபோல் நாயகி மிலானா நாகராஜ் வேடத்தில் தமன்னா நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு Gurtundhaseetakalam (குருந்தசீதகலம்) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாகசேகர் இயக்கும் இந்த படத்திற்கு கால பைரவா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Tags :