- வீடு›
- பொழுதுபோக்கு›
- மீசையுடன் இருக்கும் தமன்னா வீடியோ செம வைரலாகிறது
மீசையுடன் இருக்கும் தமன்னா வீடியோ செம வைரலாகிறது
By: Nagaraj Wed, 20 May 2020 4:09:40 PM
மீசையுடன் இருக்கும் தமன்னாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்து ரசிகர்கள் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகமானவர் தமன்னா. இதை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி படங்கள் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் தமன்னா, வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தினமும் போட்டோ, வீடியோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில் தமன்னா மீசையுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொபைல் ஆப் மூலம் வைத்த மீசை என்றாலும், பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.