Advertisement

இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதை ஒத்துக் கொண்ட தமன்னா

By: Nagaraj Thu, 15 June 2023 11:48:23 AM

இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதை ஒத்துக் கொண்ட தமன்னா

சென்னை: இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதை தமன்னா ஒத்துக் கொண்டுள்ளார். அவர் கூறுகையில், என்னுடன் நடிக்கும் ஒருவரை காதலிப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமன்னா தற்போது ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜெயிலரை முடித்துள்ளார். அடுத்து அரண்மனை 4ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற வெப் தொடரில் இருவரும் இணைந்து நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. கோவாவில் நடந்த புத்தாண்டு விருந்தில் இருவரும் முத்தமிட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இவர்கள் இருவரும் மும்பையில் அடிக்கடி வலம் வரும் புகைப்படங்களும் வெளியாகின.

determination,love,tamannaah,truth,vijay varma, ,உண்மை, உறுதி, காதல், தமன்னா, விஜய் வர்மா

விஜய் வர்மாவை காதலிப்பது உண்மைதான் என தமன்னா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னுடன் நடிக்கும் ஒருவரை காதலிப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. நிறைய நடிகர்கள் என்னோடு நடித்து இருக்கிறார்கள். ஒருவரிடம் காதல் ஏற்பட வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் அவரிடம் ஏதாவது சிறப்பு அம்சம் இருக்க வேண்டும்.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில்தான் விஜய்வர்மாவுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. நான் எதிர்பார்க்கும் ஒரு நபரைபோல் இருந்தார். அவருடனான உறவு இயல்பாகவே உருவானது. தனக்கான எல்லாவற்றையும் விட்டு விட்டு எனக்காக வந்தார். நான் எதுவும் செய்யாமலேயே எனது உலகத்தை புரிந்து கொண்டவர் எனக்கு கிடைத்துள்ளார். என் மீது ஆழ்ந்த அக்கறை வைத்து இருக்கிறார். அவர் எனது மகிழ்ச்சிக்கான இடம்” என்று கூறியுள்ளார்.

Tags :
|
|