Advertisement

ஜெயிலர் செட் வீடியோவை வெளியிட்ட தமன்னா... செம வைரலாகிறது

By: Nagaraj Sat, 25 Feb 2023 6:46:18 PM

ஜெயிலர் செட் வீடியோவை வெளியிட்ட தமன்னா... செம வைரலாகிறது

சென்னை: செம வைரலாகும் தமன்னாவின் பதிவு... நடிகை தமன்னா ஜெயிலர் செட் வீடியோவை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

bollywood,rajini,tamannaah,yogi babu, ,ஜெயிலர், தமன்னா, நெல்சன், மோகன்லால்

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஜெயிலருடன் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா ஜெயிலர் படப்பிடிப்பு தள வீடியோவை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|