- வீடு›
- பொழுதுபோக்கு›
- நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தமன்னா படம்..
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தமன்னா படம்..
By: Monisha Wed, 20 July 2022 8:22:25 PM
தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.திரைத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமன்னா தற்போது நடித்துள்ள படம் 'பப்ளி பவுன்சர்'. இந்த படத்தை இயக்குனர் மதுர் பண்டர்கர் இயக்கியுள்ளார். இதில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹல் வைத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்ளி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.இதனை படக்குழு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.