Advertisement

தமன்னாவுக்கு விரைவில் திருமணம்... மும்பை தொழிலதிபரை மணக்கிறாரா?

By: Nagaraj Wed, 16 Nov 2022 11:50:18 PM

தமன்னாவுக்கு விரைவில் திருமணம்... மும்பை தொழிலதிபரை மணக்கிறாரா?

சென்னை: தமன்னா வாய்ப்புகளை நிராகரித்ததற்கு காரணம் என்னவென்று தெரிய வந்துள்ளது. ஆமாங்க. விரைவில் திருமணமாம்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் தமன்னா. படிப்படியாக அவர் படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டே வருகிறார். வாய்ப்புகள் வரவில்லையா அல்லது அவர் வரும் வாய்ப்புகளை எல்லாம் நிராகரிக்கிறாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால்தான் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாராம்.

tamannaah,married,confirmed,mumbai,businessman,description ,தமன்னா, திருமணம், உறுதி, மும்பை, தொழிலதிபர், விளக்கம்

மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் தமன்னா திருமணம் செய்ய இருக்கிறார். இதற்குமுன் தமன்னா திருமணம் பற்றிய செய்தி பரவினால் அது வதந்தி என உடனே விளக்கம் அளித்துவிடுவார். ஆனால் தற்போது அவர் திருமண செய்தியை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் தமன்னாவுக்கு மும்பை தொழிலதிபருடன் திருமணம் நடப்பது உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.

Tags :
|