Advertisement

சின்ன படங்களையும் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள்

By: Nagaraj Tue, 25 July 2023 11:24:02 PM

சின்ன படங்களையும் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள்

சென்னை: சின்ன படங்களையும் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள் என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள்.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க தோனியும், சாக்‌ஷியும் முடிவு செய்திருந்தனர்.

lgm,tamil people,vetri,small films,harish kalyan ,எல்ஜிஎம், தமிழ் மக்கள், வெற்றி, சிறிய படங்கள், ஹரிஷ் கல்யாண்

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

எல்ஜிஎம் திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண், “பெரிய படங்களை மட்டுமல்ல அயோத்தி, குட் நைட், டாடா போன்ற சிறிய படங்களையும் தமிழ் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர். எல்ஜிஎம்மை உங்கள் முன்பு கொண்டு வந்துள்ளோம். தோனி தயாரிப்பில் நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறினார்.

Tags :
|
|