Advertisement

வருமானத்திற்காக மளிகை கடை ஆரம்பித்த தமிழ் திரைப்பட இயக்குனர்!

By: Monisha Tue, 23 June 2020 11:12:46 AM

வருமானத்திற்காக மளிகை கடை ஆரம்பித்த தமிழ் திரைப்பட இயக்குனர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் வருமானம் சுத்தமாக இல்லை

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வறுமையின் காரணமாக மளிகை கடை ஆரம்பித்து உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. திரையுலகிலிருந்து வருமானம் இல்லை என்பதற்காக அரசையும் சமூகத்தையும் குறை சொல்லாமல் வருமானத்திற்கு மாற்று வழியைத் தேடியுள்ளார்.

grocery store,curfew,director,anand,chennai ,மளிகை கடை,ஊரடங்கு,இயக்குனர்,ஆனந்த்,சென்னை

மௌன மழை’, ’ஒரு மழை நான்கு சாரல்’ மற்றும் ’துணிந்து செய்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆனந்த். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள ’நானும் பேய்தான்’ என்ற திரைப்படம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீஸ் ஆக தாமதம் ஆகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு மேலாக வேலை இன்றி வருமானம் இன்றி இருந்த இயக்குனர் ஆனந்த் இனிமேலும் சும்மா இருக்க விரும்பாமல் உடனடியாக ஒரு மளிகைக் கடையை சென்னை அருகே உள்ள முகலிவாக்கம் என்ற பகுதியில் ஆரம்பித்துள்ளார். இந்த கடை மூலம் கிடைக்கும் வருமானத்தில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|