Advertisement

ஒரே நாளில் 5 மில்லியன் பார்வைகளை கடந்த பத்து தல படத்தின் டீசர்

By: Nagaraj Sun, 05 Mar 2023 2:01:46 PM

ஒரே நாளில் 5 மில்லியன் பார்வைகளை கடந்த பத்து தல படத்தின் டீசர்

சென்னை: ‘பத்து தல’ படத்தின் டீசர் ஒரே நாளில் ஐந்து மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஓபாலி என்.கிருஷ்ணா, அடுத்து சிம்புவின் ‘பத்து தல’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

obali n. krishna,pathu thala,simbu, ,ஓபாலி என்.கிருஷ்ணா, சிம்பு, பத்து தல

2017ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான ‘முஃதி’ யின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் டீசர் ஒரே நாளில் ஐந்து மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இதனை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Tags :
|