Advertisement

ஈஸ்வரன் படத்தின் டீசர் நாளை அதிகாலை 4:32 மணிக்கு வெளியாகும்!

By: Monisha Fri, 13 Nov 2020 2:21:05 PM

ஈஸ்வரன் படத்தின் டீசர் நாளை அதிகாலை 4:32 மணிக்கு வெளியாகும்!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படத்தின் டீசர் நாளை அதிகாலை 4:32 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'ஈஸ்வரன்' படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

simbu,nithi agarwal,eeswaran,teaser,suchindran ,சிம்பு,நிதி அகர்வால்,ஈஸ்வரன்,டீசர்,சுசீந்திரன்

அதன்படி சற்று முன் இந்த படத்தின் டீசர் நாளை அதிகாலை 4:32 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் நள்ளிரவு 12 மணி அல்லது பகலில் ஏதாவது ஒரு நேரத்தில் தான் டீசர், டிரைலர் வெளியாகும். ஆனால் வித்தியாசமாக 4:32 மணிக்கு 'ஈஸ்வரன்' படத்தின் டீசர் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Tags :
|
|