Advertisement

விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்?

By: Nagaraj Thu, 09 June 2022 11:08:45 PM

விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்?

சென்னை: விஜய் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கெஸ்ட் ரோல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தளபதி விஜய் நடித்து வருகின்ற 66வது படத்தில் மகேஷ் பாபு கெஸ்ட் ரோல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார்.

actor,yogi babu,fans,vijay,maheshbabu ,நடிகர், யோகிபாபு, ரசிகர்கள், விஜய், மகேஷ்பாபு

தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். நடிகர் விஜயுடன் பிகில், பீஸ்ட், மெர்சல், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது தளபதி 66 படத்திலும் யோகி பாபு கம்மிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் மகேஷ் பாபு நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Tags :
|
|
|