Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பயிற்சியை தொடங்கும் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் - சாய் அறிவிப்பு

பயிற்சியை தொடங்கும் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் - சாய் அறிவிப்பு

By: Monisha Fri, 22 May 2020 1:45:49 PM

பயிற்சியை தொடங்கும் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் - சாய் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு, விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களிலும் மீண்டும் பயிற்சியை தொடங்கும் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி விதிமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

indian sports authority,training center,regulations,facial shield,arogya setu app ,இந்திய விளையாட்டு ஆணையம்,பயிற்சி மையம்,விதிமுறைகள்,முககவசம்,ஆரோக்ய சேது செயலி

* மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள கொரோனா நடைமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும்.

* அரசின் நடைமுறை விதியில் இருந்து சாயின் வழிகாட்டுதல் வித்தியாசப்பட்டால் அரசு அறிவித்துள்ள நடைமுறைக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

* பயிற்சி பெறும் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* கொரோனா வைரசின் பாதிப்பு மற்றும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக விளக்க வேண்டும்.

* முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பயிற்சி மையத்தின் நுழைவு வாயிலில் இருந்தே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

indian sports authority,training center,regulations,facial shield,arogya setu app ,இந்திய விளையாட்டு ஆணையம்,பயிற்சி மையம்,விதிமுறைகள்,முககவசம்,ஆரோக்ய சேது செயலி

* குத்துச்சண்டையில் பார்ட்னருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும், தொடர் ஓட்டத்தில் ‘பேட்டனை’ மற்ற வீரருடன் மாற்றவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

* தற்போதைய நிலையில் வீரர்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* வீரர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்வதுடன், அது குறித்த அறிக்கையை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

* அனைத்து வீரர்களும், ஊழியர்களும் ஆரோக்ய சேது செயலியை முறையாக பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.

* வீரர்கள் தங்களது தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :