Advertisement

துணிவு படம் 3 ம் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம்

By: vaithegi Sat, 14 Jan 2023 6:35:49 PM

துணிவு படம்  3 ம் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' போன்ற திரைப்படங்கள் நேற்று வெளியானது.இதையடுத்து ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள், சினிமா வெளியீட்டிற்காக சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை என மொத்தம் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் 1,168 தியேட்டர்கள் உள்ளன.இதில் பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு படங்களுக்கு சரிசமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்திருந்தது.

fortitude,collection ,துணிவு , வசூல்

இந்த 2 படத்திற்கும் சுமார் 500 திரையரங்கள் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து துணிவு படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது.2-வது நாளில் சராசரி வசூலை பெற்றது. ஆனால் 3 ம் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது.

துணிவு பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழகத்தில் சுமார் ரூ.46 கோடியாக உள்ளது, மேலும் படத்தின் உள்நாட்டில் ரூ.65 முதல் 70 கோடி வரை வசூலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 'துணிவு' திரைப்படம் 3-ம் நாள் முடிவில் உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் தோராயமாக ரூ. 93 கோடிகளை ஈட்டியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Tags :