Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • துணிவு படத்தின் ஓவர்சீஸில் இதுவரை நடந்த புக்கிங்கில் படம் ரூ. 50 லட்சம் வரை வசூல்

துணிவு படத்தின் ஓவர்சீஸில் இதுவரை நடந்த புக்கிங்கில் படம் ரூ. 50 லட்சம் வரை வசூல்

By: Nagaraj Sat, 31 Dec 2022 10:00:06 PM

துணிவு படத்தின் ஓவர்சீஸில் இதுவரை நடந்த புக்கிங்கில் படம் ரூ. 50 லட்சம் வரை வசூல்

சென்னை: நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ஓவர்சீஸில் இதுவரை நடந்த புக்கிங்கில் படம் ரூ. 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இவர்களது கூட்டணியில் அஜித் நடித்துள்ள 3வது திரைப்படம் இது.


இது முழுக்க முழுக்க வினோத்தின் கதையில் உருவாகி இருக்கிறது. இதுவரை வந்த போஸ்டர்களில் அஜித் துப்பபாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

ajith,thadvu,trailer,celebration,fans,overseas booking ,அஜித், துணிவு, டிரைலர், கொண்டாட்டம், ரசிகர்கள், ஓவர்சீஸ் புக்கிங்

பட ரிலீஸ் பொங்கலுக்கு என படக்குழு அறிவித்துவிட்டார்கள். இதனால் வெளிநாடுகளில் படத்தின் புக்கிங் எப்போதோ தொடங்கிவிட்டது. அதன்படி ஓவர்சீஸில் இதுவரை நடந்த புக்கிங்கில் படம் ரூ. 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கலைஞர் தொலைக்காட்சி சேட்டிலைட் உரிமத்தை பெற நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது. இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் துணிவு படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படம் பக்கா அதிரடி பேக்கேஜாக உருவாகியிருப்பது உறுயாகியுள்ளது என கொண்டாடிவருகின்றனர்.

Tags :
|
|
|