Advertisement

குட்டி ஸ்டோரி பாடலின் தல தோனி வெர்ஷன் இணையதளத்தில் வைரல்!

By: Monisha Tue, 07 July 2020 2:51:12 PM

குட்டி ஸ்டோரி பாடலின் தல தோனி வெர்ஷன் இணையதளத்தில் வைரல்!

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் நள்ளிரவு 12 மணி முதல் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் குவித்து வருகின்றனர். தோனியின் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பாவனா, ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’குட்டி ஸ்டோரி’ பாடலின் தல தோனி வெர்ஷனை பாடி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

kutty story,song,dhoni,birthday,viral ,குட்டி ஸ்டோரி,பாடல்,தோனி,பிறந்தநாள்,வைரல்

குறிப்பாக இந்த பாடலில் இடம்பெற்றுள்ள தோனியின் பெருமையை குறிக்கும் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவற்றில் சில வரிகள் பின்வருமாறு:-

இவரு வழி தனி வழி, ராஞ்சி சூப்பர் கிங்ஙா சீறி வந்த பாயும் புலி
கிரவுண்ட்ல இவரு நடந்து வந்தா ஃபேன்ஸ் வில் பி கிரேஸி
ஹெலிகாப்டர் ஷாட்டு நண்பா.. ஆல்வேய்ஸ் சரவெடி
டிசைன் டிசைன்னா சிக்சர்... வச்சு செய்வாரு மாப்பி
கீப்பிங் பண்ணா ஸ்டெப்பிங் ஹிட்டு, கேப்டன் ஆனா இப்ப டீமே கெத்து
2007ல்ல அடிச்சாரு ஒரு கப்பு, அதுக்கு அப்புறம் 2011ல்ல ஒரு கப்பு.

Tags :
|
|