- வீடு›
- பொழுதுபோக்கு›
- தளபதி 68 படத்தில் இணைந்துள்ள முன்னணி நட்சத்திரங்கள்
தளபதி 68 படத்தில் இணைந்துள்ள முன்னணி நட்சத்திரங்கள்
By: Nagaraj Wed, 04 Oct 2023 11:50:51 AM
சென்னை: தளபதி 68ல் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதால் ரசிகர்கள் இப்போதே இந்த படத்தை வெகுவாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
லியோ படத்தை தொடர்ந்து விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், இப்படம் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.
இந்நிலையில், இப்படத்தில் யார்யாரெல்லாம் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் பிரபு தேவா, பிரஷாந்த், மைக் மோகன் மற்றும் ஜெயராம் நடிக்கிறார்களாம். மேலும் நடிகைகளில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரியங்கா மோகன் மற்றும் லைலா நடிப்பதாக கூறப்படுகிறது.
இதில் பிரியங்கா மோகனுக்கு பதிலாக தான் மீனாட்சி சவுத்ரி என தகவல் வெளிவந்த நிலையில், அது உண்மையில்லை, இருவருமே இப்படத்தில் நடிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
அதே போல் மைக் மோகனுக்கு இப்படத்தில் வெவ்வேறு விதமான குணங்கள் இருக்கும் என்றும், அவருக்கும் விஜய்க்கும் இடையே அதிக காட்சிகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.