Advertisement

தனது தாயார்வுடன் தளபதி விஜய்

By: vaithegi Wed, 26 Apr 2023 12:19:11 PM

தனது தாயார்வுடன் தளபதி விஜய்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது புதிய கேங்ஸ்டர் படமான ‘லியோ’ படப்பிடிப்பில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ‘வாரிசு’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் சுமார் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.

அதையடுத்து இப்பொது, நடிகர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகருடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி கொண்டு வருகிறது. சமீபத்தில், வெளியான வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது, அவரது தந்து பெற்றோர்களை கண்டுகொள்ளவில்லை என்று கருத்துக்கள் பல எழுந்தது.

commander vijay,mother shoba ,தளபதி விஜய், தாயார்  ஷோபா

ஆனால், இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஒரு யூட்யூப் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், இத்தருணத்தில் அவரது ரசிகர்களை அவர் மகிழ்விப்பது தான் முக்கியம். அங்கே எங்களை கவனிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அவர் கூறினார்.

இந்த நிலையில், விஜய் தனது பெற்றோர் ஷோபா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் 50-வது திருமண நாளை கொண்டாடியபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags :