Advertisement

தனி ஒருவன்-2 அப்டேட் கொடுத்த இயக்குனர் மோகன் ராஜா

By: Nagaraj Tue, 29 Aug 2023 09:25:57 AM

தனி ஒருவன்-2 அப்டேட் கொடுத்த இயக்குனர் மோகன் ராஜா

சென்னை: வீடியோ வெளியிட்டு தனி ஒருவன் 2 அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார்.

thani oruvan-2,director mohan raja,video,production company ,தனி ஒருவன்-2, இயக்குனர் மோகன் ராஜா, வீடியோ, தயாரிப்பு நிறுவனம்

ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், தனி ஒருவன் 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.

Tags :
|