Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி பொண்டாட்டி

வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி பொண்டாட்டி

By: Nagaraj Mon, 13 Nov 2023 8:55:48 PM

வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி பொண்டாட்டி

சென்னை: சூர்யாவின் பதிவு... தீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி பொண்டாட்டி” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு 2 மணி நேரத்தில் 6 இலட்சத்துக்கும் அதிகமான லைக் பெற்றுள்ளது. நீண்ட நாள்களாக காதலித்துவந்த நடிகர் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியா என்ற மகனும் , தேவ் என்ற மகளும் இருக்கிறார்கள்.

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

suryas post,most like,instagram,life,jyotika ,சூர்யாவின் பதிவு, அதிக லைக், இன்ஸ்டாகிராம், வாழ்க்கை, ஜோதிகா

நடிகை ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜோதிகா உடற்பயிற்சி மையத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட வீடியோ வைரலானது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி பொண்டாட்டி” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு 2 மணி நேரத்தில் 6 இலட்சத்துக்கும் அதிகமான லைக் பெற்றுள்ளது

Tags :
|