- வீடு›
- பொழுதுபோக்கு›
- அதுதான்யா அஜித்... நெகிழ்ந்து பேசும் ரசிகர்கள்! காரணம் இதுதான்!!!
அதுதான்யா அஜித்... நெகிழ்ந்து பேசும் ரசிகர்கள்! காரணம் இதுதான்!!!
By: Nagaraj Thu, 15 Dec 2022 11:23:28 PM
சென்னை: அதுதான்யா அஜித்... நெகிழ்ந்து போகும் ரசிகர்கள். அப்படி என்னங்க நடந்தது.
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்ங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும்.இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் ஜான் கொக்கனுக்கு நடிகர் அஜித் சண்டை காட்சிகளின் போது ஏற்படாமல் இருப்பதற்காக அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த அதி நவீன பாதுகாப்பு உபகரணங்களை நடிகர் ஜான் கொக்கன் அணிந்து
அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த
புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
மேலும்
தன்னுடன் நடிக்கும் சக நடிகருக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படக் கூடாது
என்று அவருடைய பாதுகாப்பில் நடிகர் அஜித் கவனம் செலுத்தியது ரசிகர்கள்
மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது