Advertisement

ப்ரீ புக்கிங்-ல் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளிய துணிவு படம்

By: Nagaraj Sun, 08 Jan 2023 6:01:15 PM

ப்ரீ புக்கிங்-ல் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளிய துணிவு படம்

சென்னை: முன்பதிவிலேயே வாரிசை ஓரங்கட்டியுள்ளதாம் துணிவு திரைப்படம். இதனால் எங்க தலதான் வசூலில் எப்பவும் நம்பர் 1 என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் வருகிற 11ம் தேதி வெளியாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரு திரைப்படங்களின் ப்ரீ புக்கிங் நேற்றில் இருந்து துவங்கியுள்ளது.

 ,விஜய், அஜித், ரசிகர்கள், முன்பதிவு, ஓரங்கட்டியுள்ளது, பர்ஸ்ட்

இந்த நிலையில், இதுவரை துணிவு மற்றும் வாரிசு ப்ரீ புக்கிங்கில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

அதன்படி விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 1.4 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், அதைவிட அதிகமாக ரூ. 1.5 கோடி வசூல் செய்து ப்ரீ புக்கிங்கில் வாரிசு படத்தை ஓரங்கட்டியுள்ளது துணிவு. இதன்முலம் முன்பதிவில் நம்பர் 1 என நிரூபித்துள்ளார் அஜித். இத்தகவல் அறிந்த ரசிகர்கள் செம மாஸ்... எங்க தலதான் எப்போதும் பர்ஸ்ட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Tags :