Advertisement

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 10வது போட்டியார் மைம் கோபியாம்!!!

By: Nagaraj Mon, 30 Jan 2023 12:14:34 PM

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 10வது போட்டியார் மைம் கோபியாம்!!!

சென்னை: குக் வித் கோமாளி 10வது போட்டியாளர் யார் என்ற ரகசியம் தெரியவந்துள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அவர் மைம் கோபியாம்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் தொடங்கியது. மிக பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இந்த தொடரில் தற்போது மொத்தம் 9 போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் ஒரே ஒரு போட்டியாளர் அடுத்த வாரம் ஷோவில் இணைவார் என முதல் எபிசோடில் தொகுப்பாளர் ரக்ஷன் அறிவித்தார்.

shivangi,rival,clown,fame,mime kopi,secret ,சிவாங்கி, போட்டியாளர், கோமாளி, புகழ், மைம் கோபி, ரகசியம்

அது யாராக இருக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் அதற்கான பதில் கிடைத்துவிட்டது. பல படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து வரும் மைம் கோபி தான் குக் வித் கோமாளி 4ன் பத்தாவது போட்டியாளர் என தகவல் வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளியின் முந்தைய சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது குக் ஆக வந்திருக்கிறார். அவரை போட்டியாளராக பார்த்து புகழ் உள்ளிட்ட எல்லோரும் ஷாக் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|