Advertisement

ஜெயிலர் படத்தின் 3வது பாடல் நாளை வெளியாகிறது

By: Nagaraj Tue, 25 July 2023 11:22:02 PM

ஜெயிலர் படத்தின் 3வது பாடல் நாளை வெளியாகிறது

சென்னை: ஜெயிலர் படத்தின் 3வது பாடல் ஜுஜுபி நாளை மாலை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

film crew,notification,tomorrow evening,jailer,youtube,views ,படக்குழு, அறிவிப்பு, நாளை மாலை, ஜெயிலர், யூடியூப், பார்வைகள்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. ஹுக்கும் எனும் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. யூடியூபில் 1.2 கோடி பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் நாள் வெளியாக உள்ள நிலையில் படத்தின் 3வது பாடல் ஜுஜுபி நாளை மாலை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
|