- வீடு›
- பொழுதுபோக்கு›
- தனுஷ் இயக்கி நடிக்க உள்ள 50வது படத்தில், பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்
தனுஷ் இயக்கி நடிக்க உள்ள 50வது படத்தில், பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்
By: vaithegi Wed, 24 May 2023 11:13:00 AM
50வது படத்தில் நடிகர்கள் பட்டாளம் நடிக்கவுள்ளதாம் ...... நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் நடித்து கொண்டு வருகிறார். இதன் இடையில், தனுஷின் 50-வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், இந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும் அறிவிப்பு ஒன்று வெளியானது.
அட ஆமாங்க… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள 50வது படத்தில், பல முக்கிய நடிகர்கள் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து தற்போது வரை, எஸ்ஜே சூர்யா, சுந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்படு உள்ளதாம்.
மேலும், இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். ஒரு பெரிய கூட்டமே படத்தில் நடிக்க உள்ளதால்.இந்த படத்தின் பட்ஜெட் பெரிய லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் மற்ற விவரங்கள் வரும் என்று படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.