Advertisement

காந்தாரா படத்தின் பூத கோலா வேடமணிந்த நடிகர் புகழ்

By: Nagaraj Sat, 25 Feb 2023 7:52:33 PM

காந்தாரா படத்தின் பூத கோலா வேடமணிந்த நடிகர் புகழ்

சென்னை: பூத கோலா வேடமணிந்த புகழ்... 'குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் புகழ், காந்தாரா படத்தின் பூத கோலா வேடமணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கன்னட மொழிப் படங்களில், 'கேஜிஎப்' திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாக 'காந்தாரா' திரைப்படம் இருந்து வருகிறது. இந்த படத்தைப் பார்த்து மிரண்டு போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டியை வீட்டிற்கு அழைத்து வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.

cook with clown,booth cola,promo,scare act,surprise ,குக் வித் கோமாளி, பூத கோலா, ப்ரோமோ, மிரட்டும் நடிப்பு, ஆச்சரியம்

அந்தளவுக்கு அப்படத்தில் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு என்று எல்லாம் அருமையாக தீட்டி நம்மை பிரமிப்படையச் செய்திருப்பார்கள். அதிலும் 'பூத கோலா' என்ற நாட்டுப்புற நடனம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

இந்நிலையில், அந்த கெட்டப்பை போட்டு 'விஜய் டிவி' புகழ், குக் வித் கோமாளி செட்டுக்கு வந்திருக்கிறார். அவரது மிரட்டும் அந்த நடிப்பைப் பார்த்த பிரபலங்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து கைதட்ட, சில பிரபலங்கள் கண்ணீர் விட்டு ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.

'குக் வித் கோமாளி சீசன் 4' -க்கான இந்த வார ப்ரோமோவில்தான் இந்த காட்சி இடம்பெற்று வைரல் ஆகி இருக்கிறது

Tags :
|