Advertisement

ட்விட்டரிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கிறார் இந்த நடிகர்

By: vaithegi Sun, 30 Apr 2023 4:07:57 PM

ட்விட்டரிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கிறார் இந்த நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளமான தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் காரணத்தை தெரிவிக்கலாமல், ட்விட்டரில் இருந்து சிறிது நேரம் இருப்பேன், ஆனால் ‘விரைவில் திரும்பி வருவேன்’ என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், எனது படங்கள் பற்றிய அனைத்து அப்டேட்களையும் எனது குழு பகிர்வார்கள் என தெரிவித்துள்ளார். எனவே இதனை கண்ட அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

twitter,sivakarthikeyan ,ட்விட்டர்,சிவகார்த்திகேயன்

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வருடத்தில் இவருக்கு 2 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதாவது, இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாவீரன் படமும் இந்தாண்டு வெளியாகும்.

Tags :