Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • என்னை இயக்குனராக மாற்றிய நடிகர்...நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

என்னை இயக்குனராக மாற்றிய நடிகர்...நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

By: Monisha Mon, 31 Aug 2020 2:47:32 PM

என்னை இயக்குனராக மாற்றிய நடிகர்...நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ் அதன்பின் இயக்குநராக மாறினார். அவர் இயக்கிய முதல் படம் நாகார்ஜூனா நடித்த 'மாஸ்' திரைப்படமாகும். அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடன இயக்குநராக இருந்த தன்னை 'மாஸ்' திரைப்படம் மூலம் இயக்குனராக மாற்றிய நடிகர் நாகார்ஜுனாவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து தென்னிந்திய திரையுலகமே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வந்தது.

raghava lawrence,nagarjuna,director,actor,birthday ,ராகவா லாரன்ஸ்,நாகார்ஜுனா,இயக்குனர்,நடிகர்,பிறந்தநாள்

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் டான்ஸ் மாஸ்டராக இருந்த என்னை 'மாஸ்' திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆகிய நாகார்ஜுனா அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ராகவேந்திர சுவாமி உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் அமைதியையும் கொடுக்க பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த நாகார்ஜுனா 'உங்களுடைய 'லட்சுமிபாம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags :
|