Advertisement

லியோ படத்தில் இணைந்த த்ரிஷ்யம் 2 படத்தின் நடிகை

By: Nagaraj Tue, 09 May 2023 11:25:27 PM

லியோ படத்தில் இணைந்த த்ரிஷ்யம் 2 படத்தின் நடிகை

சென்னை: லியோ படத்தின் அப்டேட்... லியோ படப்பிடிப்பில் த்ரிஷ்யம் 2 படத்தின் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

 ,சாந்தி மாயாதேவி, லியோ, இணைந்துள்ளார், புதிய தகவல், வழக்கறிஞர்

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலின் வழக்கறிஞராக நடித்த சாந்தி மாயாதேவி லியோவில் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Tags :