Advertisement

லாஸ் ஏஞ்சல்சில் விருது மேடையில் தடுமாறி விழுந்த நடிகை

By: Nagaraj Tue, 28 Feb 2023 10:31:32 PM

லாஸ் ஏஞ்சல்சில் விருது மேடையில் தடுமாறி விழுந்த நடிகை

லாஸ் ஏஞ்சல்ஸ்: தடுமாறி விழுந்த நடிகை... லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விருது மேடையில் நடிகை ஒருவர் தடுமாறி விழுந்த சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 29வது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் (45) பங்கேற்றார்.

அவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார், அதை பெறுவதற்காக மேடையில் ஏறியபோது, திடீரென ஆடை சிக்கியதால் கீழே விழுந்தார். அங்கிருந்த ஒருவர் கையைப் பிடித்து காப்பாற்றினார்.

award stage,hollywood actress,incident ,சம்பவம், விருது மேடை, ஹாலிவுட் நடிகை

பின்னர் மேடைக்கு சென்று விருதை பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெசிகா சாஸ்டைன் கூறுகையில், ‘ஜார்ஜ் அண்ட் டாமி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

விருது பெறுவதற்காக மேடைக்கு செல்லும் வழியில் திடீரென நான் அணிந்திருந்த கவுன் கால்களில் சிக்கி கீழே விழுந்தேன். இப்படி நடக்கும் என்று கூட எதிர்பார்க்கவில்லை. அங்கு என் நண்பர்கள் எனக்கு உதவினார்கள். அவர்களுக்கு நன்றி’ என்றார்.

Tags :