Advertisement

கவினின் அடுத்த படத்தில் இந்த நடிகை ஜோடியாக நடிக்கவுள்ளார்

By: vaithegi Sat, 18 Mar 2023 10:58:24 AM

கவினின் அடுத்த படத்தில் இந்த நடிகை ஜோடியாக நடிக்கவுள்ளார்

கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் படம் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்றே கூறலாம்.

இந்நிலையில், கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. இதனை அடுத்து அது என்னவென்றால், கவின் நடிக்கும் அடுத்த படத்தை நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் இயக்கவுள்ளார் எனவும், அப்படத்தை ரெமோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது

gavin,actress ,கவின் ,நடிகை

அதைப்போன்று அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் கூடுதல் தகவலாக அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. எனவே அதன்படி, அப்படத்தில் கவினுக்கு ஜோடியாக இளம் நடிகையாக வளம் வரும் பிரியங்கா மோகன் தான் நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே கவினும் பிரியங்கா மோகனும் நெருங்கிய நண்பர்கள். எனவே, கவினுக்கு ஜோடியாக அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பிரியங்கா மோகன் தற்போது தனுஷிற்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார.

Tags :
|