- வீடு›
- பொழுதுபோக்கு›
- அறிவிப்பு வெளியானது... தனுஷின் 50வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்
அறிவிப்பு வெளியானது... தனுஷின் 50வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்
By: Nagaraj Wed, 18 Jan 2023 11:56:34 PM
சென்னை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தனுஷ் தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, பாடல்கள் எழுதுதல், திரைப்படங்களை இயக்குதல் போன்ற பணிகளையும் செய்துள்ளார். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. அதற்கு முன் தனுஷின் ஆடுகளம், மாப்பிள்ளை போன்ற படங்களை சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்தது.
இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது உள்ளிட்ட மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.